புதன், 23 செப்டம்பர், 2009

நாகர்கோயில் - பெயர்க்காரணம் ?

ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோயில் என அழைக்கப்படுகிறது.

திங்கள், 7 செப்டம்பர், 2009

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள்

அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராபள்ளி - பட்டுகோட்டை வளாகம் - http://www.tau.edu.in/pattukkottai/index.html
அரசு பொறியியல் கல்லூரி - http://www.aec.org.in/contact.html
பொ. ரா. பொறியியல் கல்லூரி - http://www.prcolleges.com/prec.htm
பொன்னையா ராமஜெயம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி - http://www.prcolleges.com/prcet.html
புனித ஜோசப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி - http://www.sjcetpalai.ac.in/
பரிசுத்தம் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரி - http://www.parisuthamtech.com/aboutcollege.htm
அன்னை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி - http://annaiengg.com/about.html
அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி - http://www.assalamcollege.com/

புதன், 2 செப்டம்பர், 2009

திருச்சிராப்பள்ளி - பெயர்க்காரணம்?

இவ்வூரில் சிரா என்று பெயர் கொண்ட முனிவர் ஒருவர் முன்னொரு காலத்தில் பள்ளி ஒன்று நடத்தி வந்ததாகவும், அதனாலையே திரு + சிரா + பள்ளி = திருச்சிராப்பள்ளி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. சிரா முனிவர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தாயுமானசாமி கோவிலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஈரோடு - பெயர்க்காரணம்?

ஈரோட்டில் இரு ஓடைகள் "பெரும்பளையம்" மற்றும் "காளிங்கராயன்" அமைந்துள்ளதால் அதற்கு ஈரோடு என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

நாமக்கல் - பெயர்க்காரணம்?

ஸ்ரீ நாமகிரி தாயார் குடி கொண்டிருக்கும் நாமக்கல் அவர்களுடைய பெயராலே அழைக்கபடுகிறது. கிரி என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு மலை என்று அர்த்தம், அதையே தமிழில் கல் என்று சேர்த்து நாமக்கல் என்று அழைக்கபடுகிறது.

தஞ்சாவூர் - பெயர்க்காரணம்?

ஒரு காலத்தில் தஞ்சன் என்று பெயர் கொண்ட அசுரன் வாழ்ந்து வந்தான். ஸ்ரீ ஆனந்தவள்ளி அம்மனும் ஸ்ரீ நீலமேகப்பெருமாளும் அவனை வதம் செய்தனர். அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்க அவனுடைய பெயரை தழுவி "தஞ்சாவூர்" என்று பெயர் சூட்டப்பட்டது. இவ்வூருக்கு "தஞ்சாபுரி" என்ற பெயரும் உண்டு.