வியாழன், 1 டிசம்பர், 2011

சிவகாசி - பெயர்க்காரணம் ?

சிவகாசியின் பழைய பெயர் வில்வவனம். ஹரிகேசர பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் தென்காசியில் சிவன் கோவில் எழுப்புவதற்காக, காசியிலிருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்தான். வில்வவனத்தில் சிறிது நேரம் ஒய்வு எடுத்த பின்பு, புறப்பட நினைக்கையில் சிவலிங்கத்தை சுமந்து வந்த பசு நகர மறுத்தது. இதனால் சிவபெருமானுக்கு அந்த இடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்பினான். காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவன் வில்வ வனத்தில் எழுந்தருளியதால்  சிவகாசி என்று பிற்பாடு அழைக்கப்பட்டது.