ஞாயிறு, 29 ஜனவரி, 2012

தமிழ் - எனக்கு பிடித்த வார்த்தை

1 - ஒன்று 
10 - பத்து 
100 - நூறு 
1000 - ஆயிரம் 
10000 - பத்தாயிரம் 
100000 - நூறாயிரம் 
1000000 - பத்து நூறாயிரம் 
10000000 - கோடி 
100000000 - அற்புதம் 
1000000000 - நிகற்புதம் 
10000000000 - கும்பம் 
100000000000 - கணம் 
1000000000000 - கற்பம் 
10000000000000 - நிகற்பம் 
100000000000000 - பதுமம் 
1000000000000000 - சங்கம் 
10000000000000000 - வெள்ளம் 
100000000000000000 - அந்நியம்
1000000000000000000 - அற்ட்டம் 
10000000000000000000 - பறர்ட்டம்
100000000000000000000 - பூறியம்
1000000000000000000000 - முக்கோடி 
10000000000000000000000 - மகாயுகம் 


வியாழன், 1 டிசம்பர், 2011

சிவகாசி - பெயர்க்காரணம் ?

சிவகாசியின் பழைய பெயர் வில்வவனம். ஹரிகேசர பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் தென்காசியில் சிவன் கோவில் எழுப்புவதற்காக, காசியிலிருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்தான். வில்வவனத்தில் சிறிது நேரம் ஒய்வு எடுத்த பின்பு, புறப்பட நினைக்கையில் சிவலிங்கத்தை சுமந்து வந்த பசு நகர மறுத்தது. இதனால் சிவபெருமானுக்கு அந்த இடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்பினான். காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவன் வில்வ வனத்தில் எழுந்தருளியதால்  சிவகாசி என்று பிற்பாடு அழைக்கப்பட்டது.

புதன், 30 நவம்பர், 2011

பெரும்பாலான பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதில்லையே ஏன்?

செவ்வாய், 18 ஜனவரி, 2011

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

சென்னையில் இருந்து கடலூர் செல்லும் வழியில் எத்தனை சுங்கவரி சோதனைச்சாவடிகள் உள்ளன?

மொத்தம் இரண்டு. செங்கல்பட்டு அருகில் ஒன்று, திண்டிவனம் அருகில் ஒன்று. சிறிய காருக்கு र 20 கட்டணம்.

திங்கள், 14 டிசம்பர், 2009

சென்னைலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 'ஆட்டோ காஸ்' எங்குள்ளது?

இரண்டு இடங்களில் உள்ளது.

1. மேல்மருவத்தூர் அருகில் இந்தியன் ஆயில் பங்க். தொடர்பு: 044-27529384
2. கும்பகோணம் பை பாஸ் சாலையில் இந்தியன் ஆட்டோ காஸ்.

புதன், 23 செப்டம்பர், 2009

நாகர்கோயில் - பெயர்க்காரணம் ?

ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோயில் என அழைக்கப்படுகிறது.

திங்கள், 7 செப்டம்பர், 2009

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள்

அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராபள்ளி - பட்டுகோட்டை வளாகம் - http://www.tau.edu.in/pattukkottai/index.html
அரசு பொறியியல் கல்லூரி - http://www.aec.org.in/contact.html
பொ. ரா. பொறியியல் கல்லூரி - http://www.prcolleges.com/prec.htm
பொன்னையா ராமஜெயம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி - http://www.prcolleges.com/prcet.html
புனித ஜோசப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி - http://www.sjcetpalai.ac.in/
பரிசுத்தம் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரி - http://www.parisuthamtech.com/aboutcollege.htm
அன்னை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி - http://annaiengg.com/about.html
அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி - http://www.assalamcollege.com/

புதன், 2 செப்டம்பர், 2009

திருச்சிராப்பள்ளி - பெயர்க்காரணம்?

இவ்வூரில் சிரா என்று பெயர் கொண்ட முனிவர் ஒருவர் முன்னொரு காலத்தில் பள்ளி ஒன்று நடத்தி வந்ததாகவும், அதனாலையே திரு + சிரா + பள்ளி = திருச்சிராப்பள்ளி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. சிரா முனிவர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தாயுமானசாமி கோவிலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஈரோடு - பெயர்க்காரணம்?

ஈரோட்டில் இரு ஓடைகள் "பெரும்பளையம்" மற்றும் "காளிங்கராயன்" அமைந்துள்ளதால் அதற்கு ஈரோடு என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

நாமக்கல் - பெயர்க்காரணம்?

ஸ்ரீ நாமகிரி தாயார் குடி கொண்டிருக்கும் நாமக்கல் அவர்களுடைய பெயராலே அழைக்கபடுகிறது. கிரி என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு மலை என்று அர்த்தம், அதையே தமிழில் கல் என்று சேர்த்து நாமக்கல் என்று அழைக்கபடுகிறது.

தஞ்சாவூர் - பெயர்க்காரணம்?

ஒரு காலத்தில் தஞ்சன் என்று பெயர் கொண்ட அசுரன் வாழ்ந்து வந்தான். ஸ்ரீ ஆனந்தவள்ளி அம்மனும் ஸ்ரீ நீலமேகப்பெருமாளும் அவனை வதம் செய்தனர். அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்க அவனுடைய பெயரை தழுவி "தஞ்சாவூர்" என்று பெயர் சூட்டப்பட்டது. இவ்வூருக்கு "தஞ்சாபுரி" என்ற பெயரும் உண்டு.